ஆன்மிகம்
கிருஷ்ணர்

கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2021-08-31 03:09 GMT   |   Update On 2021-08-31 03:09 GMT
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சாமி திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணசாமி, காளிங்க நர்த்தன அவதாரத்தில் காட்சி அளித்தார்.
கோவையை அடுத்த துடியலூர் பன்னிமடையில் பழமை வாய்ந்த கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சாமி திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணசாமி, காளிங்க நர்த்தன அவதாரத்தில் காட்சி அளித்தார். மேலும் சிறப்பு அபிஷேக அலங் கார பூஜை செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து தாய்மார்கள் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

கோவை பி.என்.புதூர் மருதமலை பிரதான சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. துளசி மாலைகள் மற்றும் மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அருணாச்சலம் சுப்புலட்சுமி குழுவினரின் பஜனை பாடல்கள் நடைபெற்றது. பக்தர்களுக்கு சமூக இடைவெளி யுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகளுக்கு பிரசாதம்வழங்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஹிந்து பரிஷத் சார்பில் கோவை ரத்தினபுரி பகுதியில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.

பேரூர் பச்சாபாளையத்தில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்க கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று காலை காலசந்தி பூஜைகளுடன் தொடங்கியது. 16 வகை திரவியங்களால், ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. பாமா, ருக்மணி சமேதரராக ஸ்ரீ வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் சாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News