வழிபாடு
பெரியமாரியம்மன்

தா.பேட்டை பெரியமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-12-08 04:31 GMT   |   Update On 2021-12-08 04:31 GMT
தா.பேட்டையில் பிள்ளாதுறை பெரியமாரியம்மன் கோவிலில் இளநீர், பாலை உடைத்து வைத்து சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் மாவிளக்கு, தேங்காய், பழம் படைத்து பெரியமாரியம்மனை வழிபட்டனர்.
தா.பேட்டையில் பிள்ளாதுறை பெரியமாரியம்மன் கோவிலில் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கார்த்திகை மாதம் நடைபெறும் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ண சுவாமி, சந்திகருப்பு, அரசவேம்பு, பெரியமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் பெரியமாரியம்மன் மற்றும் சந்திகருப்பு ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இளநீர், பாலை உடைத்து வைத்து சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் மாவிளக்கு, தேங்காய், பழம் படைத்து பெரியமாரியம்மனை வழிபட்டனர்.
Tags:    

Similar News