லைஃப்ஸ்டைல்
பள்ளியில் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

பள்ளியில் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

Published On 2021-01-30 04:15 GMT   |   Update On 2021-01-30 04:15 GMT
கொரோனா அச்சுறுத்தலோடு பள்ளிக்கு செல்வதிலும், பாடம் நடத்துவதிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பார்க்கலாம்.
மத்திய-மாநில அரசுகள் கொரோனாவிற்கான விழிப்புணர்வு வழிகாட்டுதலை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதை ஆசிரியர்கள் சரிவர கடைப்பிடித்தாலே போதுமானது. தன்னுடைய பள்ளி மாணவ-மாணவிகளும் அதை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தன்னையும் பாதுகாத்து, தன்னுடைய பள்ளி மாணவர்களையும் பாதுகாக்கும் கடமை ஆசிரியர்களின் தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது.

சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுதல், இடைவெளியுடன் மாணவர்களை அமர வைத்தல், மாணவ-மாணவிகள் கூட்டம் கூடுவதை தவிர்த்தல், குழுவாக சேர்ந்து படிப்பதை தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடிப்பது அவசியமாகிறது. மேலும் மாணவர்கள் கேன்டீனில் கூடுவது, பிரேயர் அரங்கில் கூடுவதையும் தவிர்க்கவேண்டும். ஒரே சமயத்தில் கூட்டமாக கழிவறைக்கு செல்வதையும் தவிர்க்கவேண்டும். குறிப்பாக அடுத்தவரிடமிருந்து நோட்டு-புத்தகங்கள், பேனா-பென்சில்களை கடன் பெறுவதையும் அறவே தவிர்க்கவேண்டும். கட்டாயம் முககவசம் அணிந்தே இருக்கவேண்டும்.
Tags:    

Similar News