செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தல்: தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை

Published On 2019-07-13 09:55 GMT   |   Update On 2019-07-13 09:55 GMT
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட வாரியாக தே.மு.தி.க. நிர்வாகிகளை அழைத்து கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை:

சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. அக்கட்சியினர் மத்தியில் சோர்வையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்தவும், கட்சிப் பணிகளை விரிவு படுத்தவும் தே.மு.தி.க. தலைமை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கட்சி தலைமை அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து மாவட்ட, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய கிளை நிர்வாகிகளை வரவழைத்து பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒருநாளைக்கு ஒரு மாவட்டம் என இதுவரை கன்னியாகுமரி, தேனி, திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு முடிந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்... மற்ற தேர்தல்களை விட உள்ளாட்சி தேர்தல் மூலம் கட்சியை வலுப்படுத்த முடியும் என நிர்வாகிகளிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News