செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் சாலை மறியல் - 2 பெண்கள் உள்பட 36 பேர் கைது

Published On 2018-05-14 10:16 GMT   |   Update On 2018-05-14 10:16 GMT
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், மீத்தேன் உள்ளிட்ட திட்டத்தை கைவிடக்கோரியும் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் சாலை மறியல் செய்தனர்.

அமைத்திடு, அமைத்திடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு, கைவிடு, கைவிடு, இயற்கை வளங்களை பாலைவன மாக்கும் திட்டத்தை கைவிடு என பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 36 பேரை சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் அனைவரையும் தங்க வைப்பதற்காக நேரு கலையரங்கத்திற்கு போலீசார் வேனில் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News