செய்திகள்
தக்காளி

மழையால் வரத்து குறைவு- தக்காளி கிலோ ரூ.100 ஆக அதிகரிப்பு

Published On 2021-11-09 07:26 GMT   |   Update On 2021-11-09 07:26 GMT
சமையலுக்கு தினசரி பயன்படுத்தி வரும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.
போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இன்று 54 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதன் காரணமாக அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கோயம்பேடு மார்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

அதேபோல் வெளி மார்கெட் மற்றும் காய்கறி, மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்படுகிறது.

இதேபோல் மழையால் பச்சை காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் குடை மிளகாய் ஒரு கிலோ ரூ.120-க்கும், ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.60-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.45-க்கும், பஜ்ஜி மிளகாய் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

சமையலுக்கு தினசரி பயன்படுத்தி வரும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் பெரும்பாலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் வரத்து குறைந்து தக்காளி விலை அதிகரித்துள்ளது” என்றனர்.

Tags:    

Similar News