செய்திகள்
விருது வென்ற சிறுமியை பாராட்டும் பிரதமர் மோடி

பால புரஸ்கார் விருது வென்ற சிறுவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2020-01-24 13:21 GMT   |   Update On 2020-01-24 13:21 GMT
தலைநகர் டெல்லியில் பால புரஸ்கார் விருது வென்ற 49 சிறுவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:

சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை, கலாசாரம் ஆகியவற்றில் புதுமைகள் படைத்த 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், வீரதீர செயல் புரியும் சிறுவர்களுக்கும் ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்’ விருதுகள் வழங்கப்படுகின்றன.
 
இந்த ஆண்டு இவ்விருதுக்கு 49 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். இவ்விருது, ஒரு பதக்கம், ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ், பாராட்டு பத்திரம் ஆகியவை அடங்கியது ஆகும்.

இந்நிலையில், பால புரஸ்கார் விருது வென்ற 49 சிறுவர்களை பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் விருது வென்ற சிறுவர்களுடன் கலந்துரையாடி, பரிசுகளையும் வழங்கினார். 
Tags:    

Similar News