செய்திகள்
டிரம்ப், ஜஸ்டின் ட்ரூடோ

ஈரான் தாக்குதலில் உக்ரைன் விமானம் விழுந்ததா?- அமெரிக்கா, கனடா சந்தேகம்

Published On 2020-01-10 01:57 GMT   |   Update On 2020-01-11 01:49 GMT
ஈரான் ஏவுகனை தாக்குதலில் உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக பல்வேறு உளவுப்பிரிவுகள் தகவல் தெரிவித்துள்ளதாக அமெரிக்கா, கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ்:

ஈரான் ஏவுகனை தாக்குதலில் உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியாக அமெரிக்கா, கனடா அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். தொழில் நுட்ப கோளாறால் விமானம் விழுந்ததாக கூறப்பட்ட நிலையில் ஏவுகணையால் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது.

ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் நொறுங்கியதாக அமெரிக்க அதிகாரிகளும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஏவுகணை தாக்குதலில் விமானம் விழுந்ததாக பல்வேறு உளவுப்பிரிவுகள் தகவல் தெரிவித்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.



ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருந்தது. ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியபோது டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்தது.

விமானம் விழுந்து நொறுங்கியதில் 82 ஈரானியர்கள், 63 கனடாவினர் உள்பட 176 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் விமானத்தை ஏவுகணை தாக்குவது போன்ற வீடியோவை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News