செய்திகள்
கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன்

கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-10 20:52 GMT   |   Update On 2021-04-10 20:52 GMT
பினராயி விஜயன், உம்மன் சாண்டியை தொடர்ந்து கேரள சபாநாயகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருகிறது. இந்த கொரோனாவால் பல்வேறு அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன், முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மாநில சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
Tags:    

Similar News