தொழில்நுட்பச் செய்திகள்
ரெட்மிபுக் ப்ரோ 2022

பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ள ரெட்மிபுக் ப்ரோ 2022 லேப்டாப்

Published On 2022-03-18 07:26 GMT   |   Update On 2022-03-18 07:26 GMT
இந்த ரெட்மிபுக் ப்ரோ 2022 மூன்று வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது.
ஜியோமி நிறுவனம் ரெட்மிபுக் ப்ரோ 2022 ஃபிளாக்‌ஷிப் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

இந்த லேப்டாப் 15 இன்ச் ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 89 சதவீதம் ஸ்கீரின் டு பாடி ரேட்ஷியோ வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட்புக் ப்ரோவில் 12-வது ஜெனரேஷன் இன்டல் கோர் ஐ7 மற்றும் ஐ5 பிராசஸர்கள், RTX2050 GPU, 16ஜிபி LPDDR 5200MHz, 512ஜிபி PCIe 4.0 எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜுடன் தரப்பட்டுள்ளன.

இந்த லேப்டாப் அலுமினியம் அலாய் கொண்ட யுனிபாடி டிசைனில் வந்துள்ளது. இதன்மூலம் எந்த தேய்மானத்தையும் தாங்கக்கூடியது. ஃபிங்கபிரிண்ட் செம்சார் பவர் பட்டனுடன் வைக்கப்பட்டுள்ளது. இதில் 1.3 கீ டிராவல் ஸ்பேஸ் உள்ள பெரிய டச்பேட் தரப்பட்டுள்ளது. 

ரெட்மிபுக் ப்ரோ 2022 விண்டோஸ் 11 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது. இதில் 72Wh பேட்டரி, 130W சார்ஜிங் வசதில், 2 தண்டர்போல்ட் போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி ஏ 3.2 போர்ட்டுகள், ஹெச்.டி.எம்.ஐ 2.0 கனெக்டர், ஆடியோ ஜாக், எஸ்.டி கார்ட் ரீடர் ஆகியவை தரப்பட்டுள்ளன.

இந்த லேப்டாப் 3 வேரியண்டுகளில் கிடைக்கிறது. ஐ5 இண்டகிரேட்டட் ஜிபியூ லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.67,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. i5+RTX2050 மாடல் இந்திய மதிப்பில் ரூ.81,300-ஆகவும், i7+RTX2050 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.89,700-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் வரும் மார்ச் 24 முதல் விற்பனைக்கு வரும் இந்த லேப்டாப் இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை.
Tags:    

Similar News