தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி டீசர்

பல்வேறு முதல்முறை அம்சங்களுடன் உருவாகும் ரியல்மி பிரீமியம் ஸ்மார்ட்போன்

Published On 2021-12-22 04:19 GMT   |   Update On 2021-12-22 04:19 GMT
ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிரீமியம் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.


ரியல்மி நிறுவனம் ஒருவழியாக தனது ஜி.டி.2 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. இது ரியல்மி நிறுவனத்தின் முதல் பிரீமியம் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது ஜனவரி 4 ஆம் தேதி அறிமுகமாகிறது.

முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ஜி.டி.2 ப்ரோ மாடலில் மூன்று புதிய அம்சங்கள் முதல் முறையாக ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பேப்பர் டெக் மாஸ்டர் டிசைன் கொண்டு உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த போனில் உலகிலேயே முதல்முறையாக பயோ-சார்ந்த பேக் கவர் வழங்கப்படுகிறது. 



இத்துடன் 150 டிகிரி அல்ட்ரா-வைடு கேமரா, ஃபிஷ்-ஐ மோட், ஆண்டெனா அரே மேட்ரிக்ஸ் சிஸ்டம், உலகின் முதல் அல்ட்ரா-வைடு பேண்ட் ஆண்டெனா ஸ்விட்சிங் தொழில்நுட்பம், வைபை என்ஹான்சர், 360 டிகிரி என்.எப்.சி. தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ரியல்மி ஜி.டி. 2 ப்ரோ மாடலில் 6.8 இன்ச் 120 ஹெர்ட்ஸ் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. ஸ்கிரீன், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் விலை 800 டாலர்களுக்கும் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி ஸ்கை லி ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.
Tags:    

Similar News