ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஆரா

ஹூண்டாய் ஆரா இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-11-29 14:35 GMT   |   Update On 2019-11-29 14:35 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காம்பேக்ட் செடான் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆரா கார் இந்தியாவில் டிசம்பர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 2020 வாக்கில் துவங்குகிறது. புதிய ஹூண்டாய் ஆரா கார் ஏற்கனவே விற்பனையாகும் எக்ஸ்சென்ட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகிறது.

புதிய ஆரா கார் ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் வெர்னா மாடல்களை தழுவிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதில் மூன்று-பெட்டி வடிவமைப்பு, ராப் அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர காரின் இதர வடிவமைப்பு அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளது.

இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



புதிய ஆரா காரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், வழங்கப்படுகின்றன. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் டீசர் மற்றும் 1.0 லிட்டர் டைரக்ட் இன்ஜக்‌ஷன் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் ஹூண்டாய் ஆரா கார் மாருதி சுசுகி டிசையர், ஃபோர்டு ஆஸ்பையர், ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 6.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.75 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Tags:    

Similar News