ஆன்மிகம்
திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில்

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

Published On 2021-10-20 06:48 GMT   |   Update On 2021-10-20 06:48 GMT
தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.
திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலைநம்பி கோவில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஏப்ரல் மாதம் கோவில் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான 16-ந் தேதி 1,500 பக்தர்கள் கோவிலுக்கு சென்ற நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக நம்பியாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால், கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வரமுடியாமல் தவித்தனர். அவர்களை மீட்பு படையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 3 நாட்களாக திருக்குறுங்குடி மலையில் மழை பெய்யவில்லை. ஆற்றிலும் வெள்ளம் தணிந்தது. இதையொட்டி இன்று (புதன்கிழமை) முதல் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News