இந்தியா
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

டிசம்பர் 19-க்குள் 2 தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும்- மக்களுக்கு கோவா முதல்வர் வேண்டுகோள்

Published On 2021-12-07 06:36 GMT   |   Update On 2021-12-07 10:20 GMT
ஒமைக்ரான் வைரஸ் பரவலால் மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
பனாஜி:

தென் ஆப்பிரிக்காவில் இருந்து  பரவிய உருமாற்று ஒமைக்ரான் கொரோனா தொற்று 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் தற்போது 23 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்துள்ளது. இதனால், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வணிகக் கடற்படைக் கப்பல் மூலம் கோவா வந்த ரஷ்யாவைச் சேர்ந்த 2 பேர் உள்பட 5 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து ஒமைக்ரான் வைரசை கண்டறியும்  சோதனைக்காக இவர்களின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுதொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், " ஒமைக்ரான் வைரஸ் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். கோவா விடுதலை நாளான டிசம்பர் 19-க்குள் தகுதியான அனைத்து குடிமக்களுக்கும் கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.  அதனால், மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து செலுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படியுங்கள்.. நிபுணர்களின் மாறுபட்ட கருத்துகளால் பூஸ்டர் தடுப்பூசி பற்றி முடிவு எடுப்பதில் தாமதம்
Tags:    

Similar News