உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வக்கீலிடம் ரூ-.8 லட்சம் மோசடி செய்ததாக அரசு பள்ளி ஆசிரியை மீது புகார்

Published On 2022-01-12 09:28 GMT   |   Update On 2022-01-12 09:28 GMT
ரூ.8 லட்சம் மோசடி செய்த ஆசிரியை மீது வக்கீல் போலீசில் புகார் செய்துள்ளார்.
புதுச்சேரி:

வக்கீலிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக அரசு பள்ளி ஆசிரியை மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வில்லியனூர் ஓம்சக்தி நகர் அரபிந்தோ வின்சிட்டி செந்தில்குமரன் வீதியை சேர்ந்தவர் ஜான்ஆண்ட்ரூ. இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி புதுவையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.  

ஜான்ஆண்ட்ரூ    மீது 2017-ம் ஆண்டு முத்தியால்பேட்டை போலீசில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மூலம் தள்ளுபடி செய்ய ஜான்ஆண்ட்ரூ   முயற்சி செய்து வந்தார். 

இதற்கிடையே இவரது மனைவியுடன் ஆசிரியையாக பணிபுரிந்த புதுவை செயிண்ட் தெரசா வீதியை சேர்ந்த பாலசுந்தரி என்பவர் தனக்கு சென்னை ஐகோர்ட்டில் தெரிந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் மூலம் வழக்கு தள்ளுபடி செய்து தருவதாக ஜான் ஆண்ட்ருவிடம் கூறினார்.

அதற்காக ஜான்ஆண்ட்ரூ விடமிருந்து ரூ-.10 லட்சம் வரை பாலசுந்தரி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் வழக்கை தள்ளுபடி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால்  ஜான்ஆண்ட்ரூ  பணத்தை திருப்பி கேட்டார்.

ஆனால் பாலசுந்தரி பணத்தை திருப்பி கொடுக்க வில்லை என தெரிகிறது. இதையடுத்து ஜான்ஆண்ட்ரூ   பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலசுந்தரியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பாலசுந்தரி ரூ-.8லட்சத்தை திருப்பி கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதற்கான காசோலையை ஜான்ஆண்ட்ரூ விடம் பாலசுந்தரி கொடுத்தார்.

இதையடுத்து அந்த காசோலையை ரெட்டியார் பாளையத்தில்  உள்ள ஒரு தேசிய வங்கியில்ஜான்ஆண்ட்ரூ  செலுத்தினார். ஆனால் பாலசுந்தரி திடீரென அந்த காசோலையை முடக்கி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த காசோலை திரும்ப வந்து விட்டது.

இதைத் தொடர்ந்துஜான்ஆண்ட்ரூ  ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னிடம் ஆசிரியை பாலசுந்தரி ரூ.8 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News