செய்திகள்
ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ்

அதிமுக எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள்... மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

Published On 2021-07-09 13:21 GMT   |   Update On 2021-07-09 13:21 GMT
அ.தி.மு.க.வை உள்ளாட்சி தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டிய மிக முக்கிய பணி எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உள்ளது.
சென்னை:

அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறியிருந்த சசிகலா மூலம் மீண்டும் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தினமும் போனில் பேசி வரும் சசிகலா விரைவில் ஜெயலலிதா சமாதிக்கு சென்று விட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க.வினரை சந்திக்க போவதாக கூறி உள்ளார்.

இந்த சலசலப்புக்கு இடையே இன்னும் சில மாதங்களில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலும் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வை உள்ளாட்சி தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டிய மிக முக்கிய பணி எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உள்ளது. அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது. இப்படி பல்வேறு விஷயங்களில் மிக முக்கிய முடிவுகளை அ.தி.மு.க. மேலிட தலைவர்கள் எடுக்க வேண்டிய அவசியம் உருவாகி இருக்கிறது.



இந்த சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் வியூகம், கூட்டணி சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.
Tags:    

Similar News