செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 336 பேருக்கு கொரோனா - பலி எண்ணிக்கை 474 ஆக உயர்வு

Published On 2021-06-10 02:29 GMT   |   Update On 2021-06-10 02:29 GMT
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,192 படுக்கைகள் உள்ள நிலையில் 719 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 473 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர்:

மாவட்டத்தில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 41,560 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 37,036 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 769 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 4,051 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 4 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,192 படுக்கைகள் உள்ள நிலையில் 719 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 473 படுக்கைகள் காலியாக உள்ளன.

சிகிச்சை மையங்களில் 1,553 படுக்கையில் உள்ள நிலையில் 503 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,050 படுக்கைகள் காலியாக உள்ளன.

விருதுநகர் ஆவுடையாபுரம், கடம்பன்குளம், வடமலாபுரம், இந்திரா நகர், சின்ன பேராலி, ஆர்.ஆர். நகர், புல்லலக்கோட்டை ரோடு, பெத்தனாட்சி நகர், என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், சூலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர், மொட்டமலை, மம்சாபுரம், அச்சம் தவிர்த்தான், கான்சாபுரம், புல்வாய்கரைப்பட்டி, ஒட்டன் குளம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, சாத்தூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, பாலையம்பட்டி, கான்சாபுரம், திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாநிலப்பட்டியலில் 336 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சராசரியாக 5 சதவீதமாக உள்ளது.
Tags:    

Similar News