ஆன்மிகம்
முருகன்

தொட்டது துலங்கும் தைப்பூசம்

Published On 2021-01-28 09:07 GMT   |   Update On 2021-01-28 09:07 GMT
தைப்பூச திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும்.
தைப்பூச திருநாளில் "தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது மக்களிடையே உள்ள பழமையான வழக்காடு சொல். எனவே அன்றைய தினம் குழந்தைகளுக்கு காது குத்துதல், கல்வி தொடக்குதல், திருமணப்பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற்கொள்ளப் பெறுகின்றன.

தைப்பூச திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவ-சக்தி ஐக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாக இந்து மதத்தில் நம்பப்படும் நீண்டகால ஐதீகம் ஆகும்.
Tags:    

Similar News