செய்திகள்
வெற்றிலை

திருச்சி, கரூர் மாவட்டங்களில் வெற்றிலை விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

Published On 2021-09-08 18:14 GMT   |   Update On 2021-09-08 18:14 GMT
கொரோனா கட்டுப்பாடு காரணமாக விசே‌ஷ நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், தற்போது பெய்யும் மழை காரணமாக வெற்றிலை உற்பத்தி அதிகரித்து உள்ளதும் இந்த விலை குறைவிற்கு காரணம் என்று கவலையுடன் தெரிவித்தார்.

திருச்சி:

திருச்சி, கரூர் உள்ளிட்ட காவிரிக் கரையோரம் உள்ள பகுதிகளில் நெல், கரும்பு, வாழைக்கு அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படுவது வெற்றிலை. இங்குள்ள வெற்றிலை கொடிக்கால்களில் 95 சதவீதம் வெள்ளை பச்சை கொடி ரகமும், மிகக் குறைந்த அளவில் கருப்பூரி ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு கிள்ளப்படும் வெற்றிலைகள் கேரளா, கர்நாடக மாநிலங்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

ஆனி, ஆடி மாதங்களில் நடவு செய்யப்பட்டுள்ள வெற்றிலை கொடிக்கால்களில் இருந்து ஐப்பசி மாதம் முதல் வெற்றிலை அறுவடைக்கு தயாராகும். இதனால் பழைய கொடிக்கால்களிலிருந்து கிள்ளப்படும் முதிகால் வெற்றிலைகளே இப்போது விற்பனைக்காக மார்க்கெட் மற்றும் மண்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளை, பச்சை கொடி ரகம் 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.3 ஆயிரம் வரை வெற்றிலையின் தரத்திற்கு ஏற்ப விற்பனை ஆனது. ஆனால் இப்போது விலை குறைந்து ஒரு சுமை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இகு குறித்து வெற்றிலை விவசாயி ஒருவர் கூறியதாவது:-

இந்த விலையானது வெற்றிலை பயிரிட்டு உள்ள விவசாயிகளுக்கு கட்டுபடியாகாது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விசே‌ஷ நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், தற்போது பெய்யும் மழை காரணமாக வெற்றிலை உற்பத்தி அதிகரித்து உள்ளதும் இந்த விலை குறைவிற்கு காரணம் என்று கவலையுடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News