உள்ளூர் செய்திகள்
.

சேலம் அன்னதானப்பட்டியில் போதையில் ரகளை செய்த சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை

Published On 2022-04-15 10:11 GMT   |   Update On 2022-04-15 10:11 GMT
சேலம் அன்னதானப்பட்டியில் போதையில் ரகளை செய்த சப்-இன்ஸ்பெக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னதானப்பட்டி:

 சேலம் அன்னதானப்பட்டி லைன்மேட்டில் உள்ள காவலர் குடியிருப்பில் 500-க்கும் போலீஸ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வரும் மகேந்திரன் என்பவரும் வசித்து வருகிறார்.

மகேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவருடைய மனைவி, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் இரவு போதையில் வீட்டிற்கு வந்த அவர், சத்தம் போட்டு தனக்குத் தானே ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை கண்டித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் , இதற்கு மேலும் யாராவது தன்னை திட்டினாலோ, அறிவுரை வழங்கினாலோ, கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்து விடுவேன் என்று மிரட்டிய படி திடீரென தனது வீட்டிற்குள் ஓடினார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் மகேந்திரனை பிடித்து அவருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினர்.

தொடர்ந்து விசாரணைக்காக அவரை அன்ன-தானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தொடர்ந்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News