செய்திகள்
நாராயண் ரானே பேட்டி அளித்த காட்சி.

செருப்பால் அடிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே பேசியது சரியா?: நாராயண் ரானே கேள்வி

Published On 2021-08-26 01:53 GMT   |   Update On 2021-08-26 01:53 GMT
யாருக்கும் பயந்து நான் மூலையில் போய் உட்கார்ந்து விட மாட்டேன். உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசை முடக்குவதற்கான அனைத்து சட்ட முயற்சிகளையும் வரும் நாட்களில் செய்வேன்.
மும்பை:

மராட்டிய போலீசாரால் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மத்திய மந்திரி நாராயண் ரானே மும்பையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பற்றி தான் பேசிய கருத்தை அவர் மீண்டும் நியாயப்படுத்தினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது என்பது கூட தெரியாதவர் மீதான கோபத்தின் வெளிப்பாடே எனது வார்த்தைகள். நான் பேசியது எப்படி குற்றமாகும்?.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத்தை செருப்பால் அடிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே ஏற்கனவே பேசினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அருவருக்க தக்க வார்த்தைகளால் பேசினார். இதெல்லாம் சரியா?.

யாருக்கும் பயந்து நான் மூலையில் போய் உட்கார்ந்து விட மாட்டேன். உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசை முடக்குவதற்கான அனைத்து சட்ட முயற்சிகளையும் வரும் நாட்களில் செய்வேன்’’ என்றார்.
Tags:    

Similar News