உள்ளூர் செய்திகள்
மத்திய மந்திரி எல்.முருகன்

அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படாது- மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி

Published On 2022-01-12 07:42 GMT   |   Update On 2022-01-12 07:42 GMT
11 மருத்துவ கல்லூரிகள் மட்டுமல்ல மதுரை எய்ம்ஸ் பணி நடைபெறுகிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள்.

கோவை:

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார். திருப்பூரில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி வைப்பதற்காக விமானம் மூலம் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் ஓரே நேரத்தில் அர்ப்பணிக்கபடுகின்றது. 4080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளால் 1,450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 11 மருத்துவ கல்லூரிகள் பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. இதற்காக பிரதமருக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதே போல செம்மொழி தமிழ் ஆய்வு மையம் இன்று 20 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது. திருக்குறளை பிரதமர் முன்னிலைபடுத்தி வருகின்றார்.

இந்த நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது. கூடுதல் தொழில்நுட்பங்கள் தான் மேம்படுத்தப்படுகிறது. டி.டி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு குரூப் 1 அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

11 மருத்துவ கல்லூரிகள் மட்டுமல்ல மதுரை எய்ம்ஸ் பணி நடைபெறுகிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் முதல்வரின் தமிழ்புத்தாண்டு குறித்த கேள்விக்கு, அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு சித்திரை ஒன்றுதான் என்றார்.

இதையும் படியுங்கள்... 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை

Tags:    

Similar News