செய்திகள்
பாயிண்ட் எடுத்த மகிழ்ச்சியில் டெல்லி வீரர் நவீன்குமார்

புரோ கபடி - பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது தபாங் டெல்லி

Published On 2019-08-30 16:18 GMT   |   Update On 2019-08-30 16:18 GMT
டெல்லியில் இன்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது தபான் டெல்லி அணி.
புதுடெல்லி:

புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே தபாங் டெல்லி அணி பொறுப்புடன் ஆடி புள்ளிகளை எடுத்தது. பாட்னா பைரேட்ஸ் அணியும் ஓரளவு விளையாடியது.

இறுதியில், தபாங் டெல்லி அணி 38 - 35 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி முதல் இடத்துக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில், தெலுகு டைட்டன்ஸ் அணியை 34-27 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பால்டன் அணி வீழ்த்தியது. 
Tags:    

Similar News