செய்திகள்
ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

திறனாய்வு உடல்திறன் போட்டி குழு - திருப்பூரில் கல்வி அதிகாரிகள் ஆலோசனை

Published On 2021-11-11 08:51 GMT   |   Update On 2021-11-11 08:51 GMT
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத பள்ளிகள், காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:

அனைத்து வகை பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டில் உள்ள தனித்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் உலக திறனாய்வு உடற்திறன் தெரிவுப் போட்டிகளை 100 சதவீதம் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத பள்ளிகள், காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தலைவராக கொண்டு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், உறுப்பினர், செயலாளர், கல்வி மாவட்ட அளவில் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர் 1, வட்டார கல்வி அலுவலர் 1, வட்டார அளவில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் மூத்த உடற்கல்வி இயக்குனர் 1.

மேலும் வட்டார அளவில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் மூத்த உடற்கல்வி இயக்குனர் ஒன்று, வட்டார அளவில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2 ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டு ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.

வட்டார அளவில் இடம்பெற்றுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் 10 நபர்களை கொண்டு குறித்த தேதிக்குள் வட்டார அளவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டத்தினை நிறைவேற்றி நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை முடிக்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையும்  சென்னை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கேட்டு கொண்டுள்ளார்.

இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் அத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று குழு அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News