ஆட்டோமொபைல்
கவாசகி ZX-25R

கவாசகி ZX-25R மோட்டார்சைக்கிள் வெளியீடு ஒத்திவைப்பு

Published On 2020-03-31 10:27 GMT   |   Update On 2020-03-31 10:27 GMT
கவாசகி நிறுவனத்தின் ZX-25R மோட்டார்சைக்கிளின் சர்வதேச வெளியீட்டு தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கவாசகி ZX-25R மோட்டார்சைக்கிள் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கவாசகி ZX-25R மோட்டார்சைக்கிள் வெளியீடு தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கவாசகி ZX-25R ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் 2019 டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கவ்ர்ச்சிகர வடிவமைப்பு மற்றும் இன்-லைன் 4 பவர்டிரெயின் உள்ளிட்ட அம்சங்களால் அதிக கவனத்தை ஈர்த்தது. 



கவாசகி ZX-25R மோட்டார்சைக்கிளில் 249சிசி, லிக்விட் கூல்டு, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் செயல்திறன் பற்றி அதிக விவரங்கள் இல்லாத நிலையில், இது அதிகபட்சமாக 40 பி.ஹெச்.பி. வரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் குவிக்ஷிஃப்டர் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காவசகி ZX-25R மோட்டார்சைக்கிளில் ட்வின்-பாட் ஹெட்லேம்ப்கள், ஃபுல் ஃபேரிங், டூயல் டோன் பெயின் ஸ்கீம் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பிரம்மாண்ட டேன்க், அன்டர்பெல்லி எக்சாஸ்ட், லோ செட் க்ளிப் ஆன் ஹேன்டிள்பார்கள் வழங்கப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷனிற்கு முன்பும் 37 எம்.எம். அப்சைடு-டவுன் ஷோவா செப்பரேட் ஃபன்ஷன் ஃபோர்க்குகளும், பின்புறம் ஹாரிசாண்ட்டல் பேக்-லிண்க் சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News