ஆட்டோ டிப்ஸ்
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்

இணையத்தில் வைரலாகும் 2023 ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் ஸ்பை படங்கள்

Published On 2021-12-28 08:56 GMT   |   Update On 2021-12-28 08:56 GMT
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் 2021 ஸ்பெக்டர் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் ஸ்பெக்டர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

செப்டம்பர் மாத வாக்கில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் காரை உருவாக்க முடிவு செய்தது. இந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தி 2023 வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லைட்கள் காணப்படுகின்றன. இந்த காரின் கிரில் அளவில் பெரியதாக காட்சியளிக்கின்றது.



ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 700 ஹெச்.பி. திறன், 765 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பேக் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

Tags:    

Similar News