தொழில்நுட்பம்
ரியல்மி

ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி

Published On 2021-06-04 11:13 GMT   |   Update On 2021-06-04 11:13 GMT
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


ரியல்மி நிறுவனம் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது. எனினும், மிட்-ரேன்ஜ், பிரீமியம் பிரிவுகளில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் 5ஜி கனெக்டிவிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், ரியல்மி நிறுவனம் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் பிரிவில் அரிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவுக்கான தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத்  தெரிவித்தார்.

இந்திய சந்தையில் 2022 ஆண்டு இறுதியில் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ரியல்மி குளோபல் 5ஜி நிகழ்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்வு கவுண்டர்பாயின்ட் ரிசர்ச், குவால்காம் மற்றும் ஜிஎஸ்எம்ஏ உடன் இணைந்து நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News