பைக்
ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர் என்ன தெரியுமா?

Published On 2022-02-17 10:12 GMT   |   Update On 2022-02-17 10:12 GMT
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜனவரி மாதம் விற்கப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. 

சில ஆண்டுகளாகவே ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் 1,43,234 யூனிட்கள் விற்கப்பட்டு ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்கூட்டர்களில் 44.61 சதவீதம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரே ஆகும்.



2-வது இடத்தை டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் பிடித்துள்ளது. 43,476 யூனிட் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் கடந்த மாதம் விற்பனை ஆகியுள்ளது. இதை தொடர்ந்து 3-வது இடத்தில் சுஸுகியின் ஆக்ஸஸ் மாடல் 42,148 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

4-வது இடத்தில் ஹோண்டா டியோ 27,837 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. 5-வது இடத்தில் டிவிஎஸ் எண்டார்க் 21,120 யூனிட்களும்,  6-வது ஹீரோ பிளஷர்  13,195 யூனிட்களும் விற்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து 7-வது இடத்தில் 9,504 யூனிட்கள் விற்பனையில் சுஸுகி பர்க்மேனும், 8-வது இடத்தில் 7,030 யூனிட்கள் விற்பனையில் யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களும் உள்ளன.

9வது மற்றும் 10-வது இடங்களில் சுஸுகி அவெனிஸ் 6,314 யூனிட்களும், யமஹா ஃபேஸினோ 6,221 யூனிட்களும் விற்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News