ஆன்மிகம்
பைரவர் சிறப்பு வழிபாடு

நாகை பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2021-07-03 03:14 GMT   |   Update On 2021-07-03 03:14 GMT
நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டிசிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டிசிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக பைரவருக்கு யாகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சாமிக்கு திரவிய பொடி,மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள காலபைரவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

இதேபோல் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் அஷ்ட பைரவர், தகட்டூர் பைரவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News