செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

Published On 2021-10-09 05:17 GMT   |   Update On 2021-10-09 05:17 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,504-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,438-க்கு விற்பனையாகிறது. இதுவே பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 504-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.69.90-க்கும், 10 கிலோ வெள்ளியின் விலை ரூ.700 உயர்ந்து ரூ.65 ஆயிரத்து 900-க்கும் விற்பனையாகிறது.
Tags:    

Similar News