லைஃப்ஸ்டைல்
கொரோனா தொற்று வராமல் தடுக்க கர்ப்பிணிகள் மறக்கக்கூடாதவை

கொரோனா தொற்று வராமல் தடுக்க கர்ப்பிணிகள் மறக்கக்கூடாதவை

Published On 2021-05-27 08:35 GMT   |   Update On 2021-05-27 08:35 GMT
கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்தாலும் பிறக்கிற குழந்தைக்குக் கொரோனா இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால், ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் இருக்கிற அம்மாக்களுக்கு ஹெச்.ஐ.வி இல்லாத குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்.
உலகம் முழுக்கக் கொரோனா வைரஸ் சூழ்ந்திருக்கிற இந்த நேரத்தில், கொரோனா தொற்று வராமல் தடுப்பது எப்படி, கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு வந்துவிட்டால் பிறக்கப் போகும் குழந்தைக்கான பாதுகாப்பு ஆலோசனைகள், கோவிட் பாசிட்டிவ் அம்மா குழந்தை பிறந்த பிறகு ஃபாலோ செய்ய வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள், தாய்ப்பால் சந்தேகங்கள் என எல்லா விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

கர்ப்பிணிகளுக்குக் கொரோனா தொற்று வராமல் தடுப்பது எப்படி?

* மாதாந்திர செக்கப்புக்காக வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர, மற்ற நேரங்களில் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அப்படி வெளியே செல்லும்போதும் மாஸ்க், கிளவுஸ், கண்களுக்குக் கண்ணாடி அணிந்து செல்வதே பாதுகாப்பு. வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் சோப் போட்டு குளித்து விடுங்கள்.

* வீட்டுக்குள் இருந்தாலும் தினமும் இரண்டு வேளைகள் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.

* கணவர் தினமும் வெளியே சென்று வருகிறார் என்றால், அவரிடமிருந்தும் தள்ளியே இருங்கள். முக்கியமாக தாம்பத்திய உறவு இந்த நேரத்தில் வேண்டவே வேண்டாம்.

* உங்களைப் பார்ப்பதற்குப் பெற்ற அம்மா அப்பா வந்தாலும் தனியறையிலேயே இருங்கள். ஓர் அறைக்குள் 3 அடி இடைவெளி எல்லாம் ஃபாலோ செய்ய முடியாது.

* காய்கறிகள் மற்றும் பழங்களை உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கழுவி, பிறகு சமையுங்கள் அல்லது தோலை சீவி விட்டுச் சாப்பிடுங்கள்.

* பால் பாக்கெட்டை சோப் தண்ணீரில் அலசிப் பயன்படுத்துங்கள்.

* இஞ்சி, பூண்டு, கிராம்பு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றைத் தினமும் உணவில் சேருங்கள்.

* நோய் எதிர்ப்பு சக்திக்கு மீன், முட்டை, சிக்கன், பயறு வகைகள் எனப் புரத உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

* மற்றபடி தனிமை, தனிமை, தனிமை என்று இருங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கும் நல்லது.

அம்மாவுக்குக் கொரோனா பாசிட்டிவ் இருந்தாலும் பிறக்கிற குழந்தைக்குக் கொரோனா இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால், ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் இருக்கிற அம்மாக்களுக்கு ஹெச்.ஐ.வி இல்லாத குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்.

டெலிவரிக்குப் பிறகு அம்மாவுக்குக் கொரோனா வந்தால்..?

மருத்துவமனைகள், ஆபரேஷன் தியேட்டர்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டவை என்பதால், டெலிவரி நேரத்தில் அம்மாவுக்குக் கொரோனா வருவதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை ஏற்கெனவே அம்மாவுக்குக் கொரோனா இருந்து, டெலிவரி நேரத்தில் எடுக்கப்பட்ட சோதனையில் அது தெரியாமல் இருந்திருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் குழந்தையை 72 மணி நேரம் கண்காணிப்பில் வைத்து, பிறகு மறுபடியும் கோவிட் டெஸ்ட் செய்வார்கள். அம்மாவை 14 நாள்கள் க்வாரன்ட்டீனில் வைத்துவிட்டு, மறுபடியும் கொரோனா செக்கப் செய்வார்கள்.

கொரோனா வந்த அம்மா தன்னுடைய பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா?

என் அனுபவத்தில் அம்மை வந்த அம்மாக்களும் தங்கள் குழந்தைக்குப் பால் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் வைரல் இன்ஃபெக்‌ஷன்தான். தற்போது கொரோனா வந்த அம்மாக்களையும் குழந்தைகளுக்குப் பாலூட்ட அனுமதிக்கிறோம். ஆனால், அம்மாக்கள் குழந்தையின் முகத்துடன் முகம் வைத்துக் கொஞ்சக்கூடாது. மாஸ்க், கிளவுஸ் அணிந்தபடிதான் குழந்தையைத் தூக்க வேண்டும்.

Tags:    

Similar News