செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் 51 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள்

Published On 2021-09-12 06:55 GMT   |   Update On 2021-09-12 06:55 GMT
திருச்சி, செங்கல்பட்டு, சேலம் ஆகிய மாவட்டங்களில் சராசரி 45 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசியை போட்டு இருக்கிறார்கள்.
சென்னை:

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்காவது தடுப்பூசி போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் பொதுமக்களிடம் குறைந்து இருக்கிறது. சுகாதாரத்துறை ஊழியர்கள் பல இடங்களில் வீடு வீடாக சென்று மக்களை அழைத்து ஊசி போட்டு வருகிறார்கள்.

இதுவரை 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஊசி போட்டுள்ளார்கள். இன்றைய மெகா திட்டத்தின் மூலம் இந்த எண்ணிக்கை 4 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



சென்னை மாநகரில் இதுவரை 51 சதவீதம் பேர் முதல் தவணை ஊசி போட்டுள்ளார்கள். 24 சதவீதம் பேர் 2-வது தவணை ஊசி போட்டுள்ளனர்.

விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போட தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அண்டை மாவட்டமான காஞ்சிபுரத்தில் 60 சதவீதம் பேர் முதல் தவணை ஊசி போட்டுள்ளார்கள். 2-வது தவணையை 13 சதவீதம் பேர் போட்டுள்ளார்கள்.

இந்த வரிசையில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணையை போட்டுள்ளார்கள்.

திருச்சி, செங்கல்பட்டு, சேலம் ஆகிய மாவட்டங்களில் சராசரி 45 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை ஊசியை போட்டு இருக்கிறார்கள்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.


Tags:    

Similar News