சமையல்
வெள்ளை சோள வெஜிடபிள் கஞ்சி

வெள்ளை சோள வெஜிடபிள் கஞ்சி

Published On 2022-02-07 05:25 GMT   |   Update On 2022-02-07 05:25 GMT
தினமும் ஏதாவது சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெள்ளை சோள வெஜிடபிள் கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

உதிரி வெள்ளை சோள முத்துகள் - 1/2 கப்,
பீன்ஸ், கேரட் - 1 கப் (பொடியாக அரிந்தது),
கடுகு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது,
தக்காளி - 1 சிறியது.
சின்ன வெங்காயம் - 1/4 கப்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்,
தயிர் - 1 கப்,
உப்பு தேவைக்கு.

செய்முறை

தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சோள முத்துகளை தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

இந்த மாவுடன் உப்புக் கலந்து, குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி 3-4 விசில் விட்டு வேகவிடவும்.

கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு, வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், உப்பு, பெருங்காயத்தூள், தனியா தூள் போட்டு வதக்கவும்.

இதில் வெந்த வெள்ளைச் சோள பவுடரை தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

அடுப்பை அணைத்து, ஆறியதும் தயிர், கறிவேப்பிலை சேர்த்துப்  பரிமாறவும்.

1 டம்ளர் குடித்தாலே போதும். வயிறு நிரம்பிவிடும்.
Tags:    

Similar News