ஆன்மிகம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடக்கம்

Published On 2021-09-17 08:40 GMT   |   Update On 2021-09-17 08:40 GMT
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் ஏகாந்தமாக நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடா்ந்து பவித்ர பிரதிஷ்டை நடந்தது. அதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் ஏகாந்தமாக நடந்தது. அதில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் கடப்பா மாவட்டம் ஜம்மாலமடுகு நரபுர வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி கோவிலில் சதுஸ்தானார்ச்சனை, அக்னிபிரதிஷ்டை, பவித்ரா பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை யாகசாலையில் வைதிக காரிய கர்மங்கள் நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட அனுமதிக்கப்படவில்லை ஏகாந்தமாக நடந்தது.

பவித்ரோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி முரளிதர், கோவில் ஆய்வாளர் முனிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News