உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், வீரகாரன் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதையும் படத்தில் கா

காளிப்பட்டி வீரகாரன், புடவைகாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2022-05-06 09:06 GMT   |   Update On 2022-05-06 09:06 GMT
காளிப்பட்டி வீரகாரன் புடவைகாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆட்டையாம்பட்டி, 

காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் அருகில் வீரன் சாமி கோவில் உள்ளது. இதேபோல் காளிப்பட்டி சந்தை கூடும் இடத்திற்கு மேற்கே புடவைக்காரி அம்மன் கோவில் உள்ளது.
வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட  இந்த கோவில்களில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதில் காளிப்பட்டி கந்தசாமி கோவில் தர்மகர்த்தா வக்கீல் செல்வகுமார், சென்றாய பெருமாள் கோவில் தர்மகர்த்தா ரங்கசாமி கவுண்டர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்

கோவில் கும்பாபிஷேக விழாவினை மகுடஞ்சாவடி பரமேஸ்வர சிவாச்சாரியார் இன்று நடத்தினார். முத்தனம் பாளையம், ஆட்டையாம்பட்டி திருமலகிரி செம்மண் திட்டு, வீராணம். பூலாவரி, தப்பகுட்டை, இளம்பிள்ளை, புத்தூர் கொண்டலாம்பட்டி, அழகாபுரம் மெய்யனூர், உடையாப்பட்டி, அக்கர பாளையம் பொன்பரப்பி பட்டி, கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி உட்பட கோவிலுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வ கோவில் பங்காளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை வேலைக்காரன் புடவைகாரி அம்மன் கோவில் திருப்பணி குழு உறுப்பினர்கள் முன்னின்று செய்தனர்.
Tags:    

Similar News