தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ்

ரூ. 83,999 துவக்க விலையில் புது சர்பேஸ் ப்ரோ லேப்டாப் அறிமுகம்

Published On 2021-02-22 11:46 GMT   |   Update On 2021-02-22 11:46 GMT
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் லேப்டாப் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது வணிகம் மற்றும் கல்வி சார்ந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லேப்டாப் இன்டெல் கோர் ஐ7 11th gen பிராசஸர், 1 டிபி எஸ்எஸ்டி, மேம்பட்ட விண்டோஸ் ஹார்டுவேர் செக்யூரிட்டி அம்சங்களுடன் கிடைக்கிறது.

புதிய சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் இன்டெல் கோர் ஐ3 துவங்கி ஐ7 வரை 11th Gen இன்டெல் கோர் சிபியு உடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்எஸ்டி கொண்டிருக்கிறது. இதனை 32 ஜிபி ரேம், 1 டிபி எஸ்எஸ்டி வரை கான்பிகர் செய்யலாம்.



இத்துடன் புதிய லேப்டாப் எல்டிஇ கனெக்டிவிட்டி வசதி கொண்டுள்ளது. எனினும், இது இன்டெல் ஐ5 மற்றும் அதற்கும் அதிக சிபியு வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2,58,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

லேப்டாப் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் 85 இன்ச் சர்பேஸ் ஹப் 2எஸ் மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது 4K பிக்சல்-சென்ஸ் டச் மற்றும் இன்க் டிஸ்ப்ளே, மைக்ரோசாப்ட் டீம்ஸ் சான்று பெற்ற ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் விலை ரூ. 2,14,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News