உள்ளூர் செய்திகள்
சென்னையில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

Published On 2021-12-31 07:42 GMT   |   Update On 2021-12-31 10:32 GMT
3-ந் தேதி தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் லேசான மழையும், 4-ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை:

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் அதி கனமழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல், மிக கனமழை பெய்யும்.

நாளை 1-ந் தேதி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.



2-ந் தேதி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

3-ந் தேதி தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் லேசான மழையும், 4-ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


Tags:    

Similar News