ஆட்டோமொபைல்
2021 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

சர்வதேச சந்தையில் அசத்தல் அம்சங்களுடன் 2021 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் அறிமுகம்

Published On 2021-02-25 07:59 GMT   |   Update On 2021-02-25 08:30 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 சி கிளாஸ் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் சர்வதேச சந்தையில் புதிய சி கிளாஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2021 சி கிளாஸ் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய சி கிளாஸ் மாடல் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஏ கிளாஸ் மற்றும் இ கிளாஸ் மாடல்களில் உள்ள பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி புதிய கிரில், பொனெ்ட், மேம்பட்ட லைட் கிளஸ்டர் மற்றும் குறைந்த ஒவர்ஹேங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



காரின் வெளிப்புற தோற்றத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும், வீல்பேஸ் முந்தைய மாடலை விட 25எம்எம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த நீளம் முந்தைய மாடலை விட 65 எம்எம் அதிகமாக இருக்கிறது. உள்புறம் புதிய மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இத்துடன் செங்குத்தாக தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் பல்வேறு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முதல் முறையாக சி கிளாஸ் மாடலில் 48V பெல்ட் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினை பொருத்தவரை இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்கள் வெவ்வேறு டியூனிங்கில் வழங்கப்படுகிறது. இதன் சி180 யூனிட் 169 பிஹெச்பி பவர், 263 என்எம் டார்க் செயல்திறனும், சி200 யூனிட் 203 பிஹெச்பி, 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

டாப் எண்ட் 1.5 லிட்டர் யூனிட் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும். பெட்ரோல் தவிர 2.0 லிட்டர் யூனிட் சி300 வேரியண்டில் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 259 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் சி300 வேரியண்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News