செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்

Published On 2019-03-28 13:02 GMT   |   Update On 2019-03-28 13:02 GMT
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே காயத்தால் விலகியுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அல்சாரி ஜோசப்பை மாற்று வீரராக சேர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடும் முக்கியமான அணிகளில் மும்பை இந்தியன்ஸும் ஒன்று. மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இடம்பிடித்திருந்தார். இவர் குதிக்கால் காயத்தால் தொடரில் இருந்து விலகினார்.

மும்பை இந்தியன்ஸ் அவருக்குப் பதிலான சிறந்த வேகப்பந்து வீச்சாளரை தேடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அல்சாரி ஜோசப்பை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் பேட்டிகளில் விளையாடியுள்ள ஜோசப், இன்னும் டி20 அணியில் இடம்பிடித்தது கிடையாது.

இதுவரை 7 டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக 41 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
Tags:    

Similar News