ஆட்டோமொபைல்
எம்.ஜி. இ.இசட்.எஸ்.

எம்.ஜி. மோட்டார் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஸ்பை படம்

Published On 2019-08-24 10:41 GMT   |   Update On 2019-08-24 10:41 GMT
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இ.இசட்.எஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் எஸ்.யு.வி. இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி. மோட்டார் இ.இசட்.எஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.யை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எம்.ஜி. இ.இசட்.எஸ். கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முழுமையாக மறைக்கப்பட்டிருக்கும் இ.இசட்.எஸ். காரில் ப்ரொடக்‌ஷன்-ஸ்பெக் ஹெட்லேம்ப், பம்ப்பர் காணப்படுகிறது. புதிய கார் ஹூன்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.



எம்.ஜி. இ.இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டு வரப்படுகிறது. முதற்கட்டமாக மொத்தம் 250 யூனிட்கள் ஷாங்காயில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கிறது.

இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 350 கிலோமீட்டர் வரை செல்லும் என எம்.ஜி. மோட்டார் தெரிவித்திருக்கிறது. எம்.ஜி. இ.இசட்.எஸ். மாடலில் 52.5 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரம் ஆகும்.

இந்தியாவில் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க எம்.ஜி. மோட்டார் இந்தியா ஃபின்லாந்தை சேர்ந்த ஃபோர்டம் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்நிறுவனம் 50 கிலோவாட் CCS/CHAdeMO டி.சி. சார்ஜிங் மையங்களை நிறுவ இருக்கிறது. 
Tags:    

Similar News