செய்திகள்
ஏழைகளுக்கு உணவு வழங்கிய காட்சி.

வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு வழங்கும் பொதுமக்கள்

Published On 2021-06-08 09:52 GMT   |   Update On 2021-06-08 12:28 GMT
திருப்பூரில் ஒரு வீதி மக்கள் இணைந்து தினமும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் காங்கேயம் சாலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் தனபாக்கியம் . இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ தனது தெருவில் உள்ள மக்களுடன் சேர்ந்து உணவு வழங்க முடிவெடுத்தார். அதன்படி வேலைக்கு  செல்ல முடியாமல் வறுமையில் வாடும்  அப்பகுதி மக்களை இணைத்து வீதியின் ஒரு இடத்தில் உணவு தயார் செய்து அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறார்.

மேலும் தயாரிக்கப்பட்ட உணவை பார்சல் செய்து  திருப்பூர் அரசு மருத்துவமனை, ஈஸ்வரன் கோவில் வீதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் என தினமும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இந்த பணியில் அப்பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு உணவுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் வெவ்வேறு விதமான உணவுகளை தயார் செய்து வழங்கி வருவதாகவும், இந்த தகவல் அறிந்து பலர் தங்களுக்கு உதவிகள் செய்வதாகவும் தெரிவித்தனர்.  தினமும் 2500 ரூபாய் செலவு ஆனாலும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News