லைஃப்ஸ்டைல்
கருப்புகொண்டை கடலை ரொட்டி

இரும்பு சத்து, நார்ச்சத்து நிறைந்த கருப்புகொண்டை கடலை ரொட்டி

Published On 2021-04-24 05:25 GMT   |   Update On 2021-04-24 05:25 GMT
இன்றைய காலகட்டத்தில் உடல் நலத்திற்கு ஊட்டமளிக்கும் உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது அவசியமானது. அத்தகைய தன்மை கொண்ட கருப்பு கொண்டையை பயன்படுத்தி ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

கருப்புகொண்டைகடலை மாவு - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

தண்ணீரை லேசாக சுடவைத்து கருப்பு கொண்டைகடலை மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

ரொட்டி தயார் செய்யும் பதத்திற்கு வரவில்லை என்றால் சிறிதளவு கோதுமை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின்னர் மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். இது சப்பாத்தியை விட சற்று கனமாக இருக்கும்.

ஆரோக்கிய பலன்:

இதில் இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடல் எடை கூடாது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கும். சருமத்திற்கும் நல்லது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News