செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வரத்து அதிகரிப்பு

Published On 2020-10-01 09:16 GMT   |   Update On 2020-10-01 09:16 GMT
வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வரத்து அதிகரித்துள்ளதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பால் திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் உள்நாடுகளுக்குள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் ஆடைகள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்கள் இருந்து வந்தன.

பின்னர் ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசிடம் அனுமதி வாங்கி மருத்துவ கவச ஆடைகள் உள்ளிட்டவற்றை சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து எந்த வித ஆர்டர்களும் திருப்பூருக்கு வரவில்லை. இதனால் தொழிலாளர்கள் கவலையில் இருந்தனர்.

இந்த நிலையில் ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்தாலும், அங்கு இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இதன் காரணமாக திருப்பூருக்கு வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் தொழில் துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.

திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் பல நாடுகளில் இருந்து ஆர்டர்கள் வரததால் கவலையில் இருந்தோம். தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிற அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் இருந்து திருப்பூருக்கு ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளது.

தற்போது வந்துள்ள ஆர்டர்களை தயாரித்து அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். விரைவில் மற்ற நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வரும் என எதிர்பார்த்து, அதற்கான ஆடை தயாரிப்புக்கு தயாராகியும் வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News