செய்திகள்

ம.பி. முதல் மந்திரியின் மைத்துனர் காங்கிரசில் சேர்ந்தார்

Published On 2018-11-03 23:05 GMT   |   Update On 2018-11-03 23:05 GMT
மத்தியப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் மந்திரியின் மைத்துனர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MadhyaPradeshElections #SanjaySinghMasani
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். ம.பி.யில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அங்கு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலை பாஜகவும், காங்கிரசும் வெளியிட்டுள்ளது. 



இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் மந்திரியின் மைத்துனர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் மைத்துனர் சஞ்சய் சிங் மாசானி. இவர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் சவுகானின் மனைவி சாதனா சிங்கின் சகோதரர் ஆவார்.

டெல்லியில் மத்தியப்பிரதேசம் காங்கிரஸ் தலைவர் கமல்நாத், கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் சஞ்சய் சிங் மாசானி, காங்கிரசில் இணைந்தார். அப்போது அவர் கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக செல்வந்தர்களின் நலனுக்காக உழைக்கும் மக்களை புறக்கணித்து வருகிறது என தெரிவித்தார். #MadhyaPradeshElections #SanjaySinghMasani
Tags:    

Similar News