செய்திகள்
மம்தா பானர்ஜி, அனுபம் ஹஸ்ரா

கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

Published On 2020-09-28 11:34 GMT   |   Update On 2020-09-28 11:34 GMT
எனக்கு கொரோனா தொற்று வந்தால் மேற்கு வங்காள முதல்வர் மம்தான பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய செயலாளராக அனுபம் ஹஸ்ரா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். .இவர் நேற்று மாலை தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பாருய்பூரில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் கூறிய கருத்துக்களுக்காக சிலிகுரியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸால் போலீஸ் புகார் அளித்துள்ளது.

அனுபம் ஹஸ்ரா அந்த நிகழ்ச்சியில் பேசும்போது ‘‘எங்கள் தொண்டர்கள் கொரோனாவை விட ஒரு பெரிய எதிரியுடன் போராடுகிறார்கள். அவர்கள் மம்தா பானர்ஜியுடன் போராடுகிறார்கள். பாஜக தொண்டர்கள் முகக்கவசம் இல்லாமல் மம்தா பானர்ஜிக்கு எதிராக போராட முடிந்தால், அவர்கள் கொரோனாவுக்கு எதிராகவும் முகக்கவசம் இல்லாமல் போராட முடியும் என்று நினைக்கிறார்கள்.

நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால், நான் சென்று மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்” என்றார். இந்த பேச்சு மம்தா கட்சியினரிடையே கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த முன்னாள் திரிணாமுல் கட்சி எம்.பி.யான ஹஸ்ரா, கொரோனா நோயாளிகளின் உடல்கள் மாநிலத்தில் தகனம் செய்யப்படுவது பரிதாபகரமானது என்று கூறினார்.

இந்நிலையில் திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் சௌகதா ராய் இதைக் கண்டித்து, இதுபோன்ற கருத்துக்கள் பாஜகவின் மனநிலையை பிரதிபலிப்பதாக கூறினார்.

இதற்கிடையில் திரிணாமுல் காங்கிரசின் சிலிகுரி பிரிவு ஹஸ்ராவுக்கு எதிராக பேரணி நடத்தி அவர் மீது போலீஸ் புகார் அளித்தது.

“நாங்கள் அனுபம் ஹஸ்ரா மீது போலீஸ் புகார் அளித்துள்ளோம். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளோம்” என்று வடக்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த திரிணாமுல் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News