செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்படும் - அரசு முதன்மை செயலாளர் தகவல்

Published On 2021-04-12 22:57 GMT   |   Update On 2021-04-13 10:41 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்படும் என்று அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கோபால் கூறினார்.
திருப்பூர்:

கால்நடை பராமரிப்புத்துறை அரசு முதன்மை செயலாளரும், திருப்பூர் மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியான டாக்டர் கோபால் நேற்று ஆய்வு மேற்கொண்டு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் மையங்களை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல் காய்ச்சல் பரிசோதனை முகாம்களையும் அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதை அதிகரிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பேரூராட்சி, நகராட்சி, தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஊராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தனியார் மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்க மருத்துவர்களை ஈடுபடுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிக தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டத்தில் தேவையான தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. பொது இடங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்க காவல்துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News