செய்திகள்
பாஜக

திருவள்ளுவருக்கு மரியாதை செய்த அர்ஜூன் சம்பத்தை கைது செய்வதா?- பா.ஜனதா கண்டனம்

Published On 2019-11-07 10:24 GMT   |   Update On 2019-11-07 10:24 GMT
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து கவுரவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது.

சென்னை:

தஞ்சாவூர் பிள்ளையார் பட்டியில் சில தினங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவமதித்தது யார் என்பதை கண்காணிப்பு கேமிரா மூலம் அடையாளம் கண்டுவிட்டதாக போலீசார் அறிவித்தும் இதுவரை கைது செய்யவில்லை.

இதற்கிடையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவி துண்டு, மாலை, ருத்ராட்ச மாலை அணிவித்து கற்பூர ஆரத்தி எடுத்து மரியாதை செய்தார்.

இதுதொடர்பாக போலீசார் அர்ஜுன் சம்பத்தை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அர்ஜூன் சம்பத் கைது நடவடிக்கைக்கு தமிழக பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-


திருவள்ளுவரை அவமரியாதை செய்தவர்கள் ஊருக்குள் உற்சாகமாக உலவும் பொழுது அவர்களை கைது செய்யாமல், போற்றுவோரை கைது செய்வது ஒருதலை பட்சம்.

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து கவுரவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News