உள்ளூர் செய்திகள்
நாமக்கல் அரங்கநாதர் கோவில்

நாமக்கல்லில் சொர்க்க வாசல் திறப்பையொட்டி பக்தர்களுக்கு லட்டு வழங்கல் ரத்து

Published On 2022-01-11 09:33 GMT   |   Update On 2022-01-11 09:33 GMT
நாமக்கல் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பின்போது லட்டு பிரசாதம் வழங்கப்பட மாட்டாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு தொறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமர்சியாக நடைபெறம். இந்த ஆண்டு கொரோனோ தொற்று காரணமாக சொர்க்க வாசல் திறப்பான அதிகாலை 4 :30 மணிக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மாறாக காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளன.  பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலில் வழிபடும் பக்தர்கள் முன்னதாக  ஆன் லைனில் பதிவு செய்து கோவிலில் தரிசிக்க முன்பதிவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் கொரோனோ தொற்று பரவலை தொடர்ந்து ஆண்டு தொறும் வழங்கப்படும் லட்டு பிரசாதம் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News