லைஃப்ஸ்டைல்
பிரசவத்திற்கு பிந்தைய மாற்றங்கள்

பிரசவத்திற்கு பிந்தைய மாற்றங்கள்

Published On 2020-11-24 08:26 GMT   |   Update On 2020-11-24 08:26 GMT
பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடலிலும், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகித்தான் ஆகவேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடலிலும், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. முன்பு இருந்ததைபோலவே உடல்வாகு பழைய நிலைக்கு உடனே திரும்பி விடும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லாதது. ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு புரோஜெஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களின் அளவுகள் குறைய தொடங்கிவிடும். அதனால் பிரசவத்திற்கு பிறகு மனச்சோர்வு அதிகரிக்கும். அது சில காலம் நீடிக்கும். அன்றாட வாழ்க்கை முறையிலும் அதன் தாக்கம் வெளிப்படும்.

அதுபோல் கவலை, எரிச்சல், மனநிலை மாற்றம், பதற்றம் போன்ற அறிகுறிகள் குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குள் எட்டிப்பார்க்கும். ‘பேபி ப்ளூ’ எனப்படும் இத்தகைய அறிகுறிகள் சில நாட்களிலேயே மறைந்துவிடும். ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகித்தான் ஆகவேண்டும். அவை குறித்து பார்ப்போம்.

மார்பகம்: பிரசவத்திற்கு பிறகு குறிப்பிட்டத்தக்க மாற்றங்கள் மார்பகங்களில் ஏற்படுகின்றன. தாய்ப்பால் கொடுப்பதற்கு தயார்படுத்துவதற்காக மார்பகங்கள் முதலில் சற்று பெரிதாகும். அப்போது மார்பகத்தில் இருக்கும் செயலற்ற கொழுப்பு திசுக்கள் செயல்பட தொடங்கும். ஆனால் இந்த மாற்றங்கள் சில காலம் மட்டுமே நிலைத்திருக்கும். அதனால் கவலைப்பட தேவையில்லை. மேலும் தாய்ப்பால் சுரப்பு காரணமாக மார்பக அளவு அதிகரிக்கிறது. இனப்பெருக்க செயல்முறை மார்பகங் களில் தாக்கங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இந்த காலகட்டத்தில் மார்பகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். பொருத்தமான பிராக்களையும் அணிய வேண் டும். டாக்டர்களின் ஆலோசனையை பெற்று குறிப்பிட்ட உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள லாம்.

எரிச்சல்: பிரசவத்திற்கு பிறகு சில பெண்கள் எரிச்சல் அடைய தொடங்குவார்கள். சின்ன விஷயத்திற்கெல்லாம் சட்டென்று கோபப்படுவார்கள். பிரசவத்திற்கு பிறகு ஹார்மோன்கள் மாற்றம் அடைவதே அதற்கு காரணம். குழந் தையை பெற்றெடுத்ததும் குறிப்பிட்ட உடல் மாற்றங்களை உணர்வார்கள். அந்த சமயத்தில் மனதுக்கு பிடித்தமானவர்களிடம் இருந்து ஆறுதலையும், அனுசரணையையும் எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்காதபட்சத்தில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். பிரசவத்திற்கு பிறகு சருமம், கூந்தல், மார்பகங்கள், உடல் எடை, அடி வயிறு, பிறப்பு உறுப்பு, குடல் போன்றவை மாற்றங்களை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது.

கால் அளவு: கர்ப்ப காலத்தில் கால்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படக்கூடும். அமெரிக்க மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி, கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிக எடை கால்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும். அதனால் கால்களின் அளவில் மாற்றம் ஏற்படும். பிரசவத்திற்கு பிறகு காலணிகளின் அளவை சிலருக்கு மாற்ற வேண்டியிருக்கும்.

வயிற்றுத் தழும்புகள்: கருவில் இருக்கும் குழந்தை வளர ஆரம்பிக்கும்போது வயிற்றின் அளவும் அதிகரிக்கும். வயிற்று தசைகள் விரிவடையும்போது தழும்புகள் ஏற்படும். பிரசவத்திற்கு பிறகும் அந்த தழும்புகள் இருக்கத்தான் செய்யும். சில சமயங்களில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். தழும்புகள் மறைவதற்கு மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

உடல் பருமன்: பிரசவத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடிவிடும். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிப்பதால் பிரசவத்திற்கு பிறகும் அதன் தாக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு கருப்பை சுருங்கி விடும். ஆனால் இடுப்பு, அடிவயிற்றை சுற்றியுள்ள உடல் பகுதி குறையாது. அதன் காரணமாக பிரசவத்திற்கு பிறகு உடல் கொஞ்சம் பெரிதாகத்தான் தோன்றும். உடல் பயிற்சி மூலம் இதை சீராக்கலாம்.
Tags:    

Similar News