ஆட்டோமொபைல்
டெஸ்லா

டெஸ்லா மற்றும் டாடா பவர் இடையே பேச்சுவார்த்தை?

Published On 2021-03-14 04:15 GMT   |   Update On 2021-03-13 11:39 GMT
எலெக்ட்ரிக் சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து டெஸ்லா மற்றும் டாடா பவர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


டெஸ்லா இன்க் மற்றும் டாடா பவர் நிறுவனங்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இரு நிறுவனங்கள் இடையே வியாபார கூட்டணி அமைய இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கான ஆலையை துவங்க இருக்கிறது. இந்த நிலையில் டாடா பவர் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தையை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தை குறித்து இருநிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.



முன்னதாக ஜனவரி மாத வாக்கில் அமெரிக்க எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா, பெங்களூரு நகரில் டெஸ்லா மோட்டார்ஸ் இந்தியா எனர்ஜி பிரைவேட் லிமிடெட் பெயரில் நிறுவனத்தை பதிவு செய்தது. 

இரு நிறுவனங்கள் இடையே கூட்டணி அமைவதாக வெளியான தகவல்களுக்கு கடந்த வாரம் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் பதில் அளித்தது. அதில் இரு நிறுவனங்கள் கூட்டணி குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவித்தது.
Tags:    

Similar News